மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுமாறு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்வழங்கும் போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை சிலவேளைகளில் அதிகரிக்கலாம்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது.
தற்போது உக்ரைன் – ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது. நிவாரணங்களை வழங்க நாம் முழுமையாக முயற்சித்து வருகின்றோம் என அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.