follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

Published on

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...