இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது.
அதற்கமைய 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.141,000 ஆக காணப்படுகிறது.22 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தங்க விற்பனை வரலாற்றில் பதிவான அதிகபட்ச விலையென்பது குறிப்பிடத்தக்கது