நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகாித்த சந்தர்ப்பங்களில் தான் அதுதொடர்பில் மக்களுக்கு நேரடியாக அறிவித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும், கையிருப்பிலுள்ள டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானது என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த நேற்று கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்தே மேற்கண்டவாறு அமைச்சர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
NO FUEL SHORTAGE.
I have repeatedly stated that if there was a fuel shortage, I would have told the nation before anybody else. I have always been truthful to the people and informed in advance about the price hike. The first to announce about the foreign currency crisis.
— Udaya Gammanpila (@UPGammanpila) August 20, 2021