யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும், அமெரிக்க WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 40 சதமாகவும் உள்ளது.
இதேவேளை, மேற்கத்தேய நாடுகள் எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்ததுடன், உச்சபட்சமாக அதன் விலை 130 டொலர்கள் வரை உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.