போலியான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று தீர்ப்பினை அறிவிப்பதற்காக விசாரணைக்கு வரவுள்ளது.
பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டதன் ஊடாக குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றினை புரிந்துள்ளதாக குற்றஞ்சுமத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சஷி வீரவன்சவிற்கு எதிரான இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.