ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.
எனினும் அதுகுறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ தொடர்ச்சியாக மௌனமாகவே இருந்தது.
இந்தநிலையில் நேற்றையதினம் தமக்கு ஜனாதிபதி செயலகத்தினால் இந்த சந்திப்பு குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டதாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.