கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இச்சந்திப்பில் சுட்டிக்காட்டது
இதன்மூலம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் கொவிட் தடுப்பூசி மருந்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது
இதன்படி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸை செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.