இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த சமரவீர நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவிற்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் , இந்த சம்பவம் தொடர்பில் நான்கு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.