எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி – சனிக்கிழமைக்குள் தீர்வு காணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 20,000 மெட்ரிக் டன் எரிபொருள் இருப்பு உள்ளது என நாட்டின் புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கள் – செவ்வாய் கிழமைக்குள் மின் துண்டிப்பு குறைக்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.