ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டிசில்வா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது குறுகிய கால பணப்புழக்க பிரச்சினை என மத்திய வங்கி கருதினாலும், அது தவறானது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பொருளாதார நெருக்கடியானது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும், இலங்கையின் கடனை மறுசீரமைத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.