நாளைய தினம்(09) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J ஆகிய வலயங்களுக்கு நாளை(09) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணிமுதம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Groups ABCDEFGHIJ:
2 1/2 hours from 8 AM to 6 PM
1 hr & 15 min from 6 PM to 11 PM
Groups PQRSTUVW:
2 hours from 9 PM to 5 PM
1 hour from 5 PM to 9 PM