ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் ஜனாதிபதியிடம் முன்வைத்தது. இன்று அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.