அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை அதிகபட்சமாக 230 ரூபாவாக உயர்த்த மத்திய வங்கி எடுத்த தீர்மானம் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ தெரிவித்துள்ளார்.
உரிய தீர்மானத்தின் மூலம் உள்ளுர் வங்கிகளில் நிலவும் டொலர் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம் என திரு.இந்திரஜித் அப்போன்சோ வலியுறுத்தியுள்ளார்.