புத்தாண்டின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்க கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கைத் தொழிலாளர்களின் வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை திருப்பி அனுப்புவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.