கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.