2022 ஆம் ஆண்டுக்கான 15 வது ஐ.பி.எல் கிரிகெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.
மொத்தம் 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகளுடன், 4 பிளே ஒப் போட்டிகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுவுள்ளன.