போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் பத்திரத்தை வீட்டுக்கு அனுப்பும் முறைமையொன்றை பொலிஸ் சிசிரீவி பிரிவின் ஊடாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு நகர் முழுவதும், 33 சந்திகள் பொலிஸ் சிசிரீவி பிரிவினரால் கண்காணிப்படுகின்றதுடன், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பிலும் இந்தப் பிரிவினால் அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.