தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் நேற்று(05) நள்ளிரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிகிரியா விமானப்படைத் தளத்தின் தீயணைப்பு வாகனம் என்பன தீப்பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தீப்பரவலினால் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.