follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் - பிரதமர்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – பிரதமர்

Published on

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை நேற்று(05) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும்.இன்று போதைப்பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே போதைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மேலும் நமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்துவிடுகிறது.

எனவே நாம் எமது பிள்ளைகளை பாதுகாத்து தேசத்தை கட்டியெழுப்பி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர்...

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும்...

42 வினாடிகளில் விற்கப்பட்ட ரயில் டிக்கெட் – 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை

மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதால்,...