அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (வயது 52) நேற்று காலமானார்.
சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஷேன் வோர்ன் உயிரிழந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.