ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் பிரகாரம் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய நிதி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,இந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடை செய்யப் போவதில்லை எனவும், இறக்குமதியை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள், தோடம்பழம், திராட்சை, சீஸ், பட்டர், மாஜரீன், சொக்கலட், இனிப்பு பண்டங்கள் மற்றும் சலவை இயந்திரம், தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் பண்டங்களை இறக்குமதி செய்வது குறித்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.
சில வகை பொருட்கள் ஏற்கனவே பாரியளவில் இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை வரையறுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதனை வரையறுப்பதற்கு கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.