follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுஉக்ரேனிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை

உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை

Published on

அங்காரா மற்றும் வோர்சாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ந்தும் நெருக்கமாகத் தொடர்புகளைப் பேணி வருகின்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, உக்ரேனில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் / மாணவர்கள் பாதுகாப்பான பாதையில் செல்வதற்கும், அவர்களை வெளியேற்றுவதற்கும் வசதிகளை வழங்கி வருகின்றது.

பதினேழு இலங்கைப் பிரஜைகள் போர் தொடங்குவதற்கு முன்னரே உக்ரேனில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அங்காரா மற்றும் வோர்சாவில் உள்ள அதன் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் இணைந்து, உக்ரேனிலிருந்து மேலும் 32 இலங்கையர்களை போலந்து எல்லை வழியாக வெளியேற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து வழியாகத் திரும்புவதற்காக போலந்து எல்லைக்குச் செல்லும் உக்ரேனில் எஞ்சியிருக்கும் இலங்கைப் பிரஜைகள், வோர்சா அல்லது அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தொலைபேசி: (வோர்சோ) +48 795 031 376, +48 536 229 694;
(அங்காரா) +90 534 456 94 98, +90 312 427 10 32

 

No photo description available.

May be an image of text that says "மேலதிக விசாரணைகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவைபின்வரும் வகையில் தொடர்புகொள்ளலாம்: தொலைபேசி: +94 233 8837 +94 மின்னஞ்சல்: dgcons@mfa.gov.lk 12 233 5942 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பு 2022 மார்ச் 02"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும்...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...