எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்துக்குள் மின்வெட்டுக் காலத்தைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகும் வரை இந்த நிலைமை தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.