பொலிஸ் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிரேண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.