கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதால் புகையிரதங்களுக்கு எரிபொருள் நெருக்கடி இல்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
புகையிரத கால அட்டவணைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.