இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை தேயிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆண்டுக்கு சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோ தேயிலையை கொள்வனவு செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பே பதிவு செய்த தேயிலையை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் அதிகரித்தால் புதிய பதிவுகள் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்