கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 30 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் . இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் பெற்றோர்கள் கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்..
அதனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பெற்றோர்களுக்கு விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றேன்.
ஏனெனில் கொவிட் பூஸ்டர் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் ஊடாக பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று அதிகம் பரவுவும் நிலைமை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். .