கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வாழ்ந்த 15 நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விலங்குகள் சட்டத்தின் கீழ் விலங்குகள் உரிமை அமைப்பு குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மாநாட்டு மண்டபத்தின் பிரதானி ஒருவரால் 140,000 ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கமைய நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்பட்டதாக தம்மிடம் தகவல் வழங்கப்பட்டது. எனினும் அந்த நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.