follow the truth

follow the truth

June, 30, 2024
Homeஉள்நாடுஇன்று மின்வெட்டு தொடர்பான அட்டவணை

இன்று மின்வெட்டு தொடர்பான அட்டவணை

Published on

நாட்டில் இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்று மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,Cஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்கள், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கைக்காக கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ்...

மொனராகலைக்கு “உறுமய”

20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச...

பதில் சட்டமா அதிபர் நாளை பதவியேற்கவுள்ளார்

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நாளை (01) பதவியேற்க உள்ளார். கடந்த 26ஆம்...