நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, எதிர்காலத்தில் கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.
இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபர ரீதியாக கொவிட் தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொவிட் பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.