ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் “இந்த கடுமையான நேரத்தில் உங்கள் ஆதரவுக்கும் உண்மையான உதவிக்கும் என்னுடைய பாராட்டுகள். யுக்ரேன் மக்கள் இதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்,” என குறிப்பிட்டிருந்தார்.