follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுநாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை

நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை

Published on

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் நேற்று(26) இடம்பெற்ற ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, சிக்கல்களற்ற காணிகளின் உரித்துரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சிக்கலற்ற ஒரு இலட்சம் காணிகளின் உரித்துரிமையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 35,000 காணி உறுதிப் பத்திரங்கள், 10 வலயங்களைச் சேர்ந்த விவசாய மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், மகாவலி பிரதேசங்களில் வசிக்கும் விவசாய மக்கள் அனைவருக்குமான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால் ஏற்பட்டவை அல்லவென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி, இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள்...

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி

இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ...