உக்ரைன் இராணுவம் ரஷ்யவுக்கு சொந்தமான 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 யுத்த தாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதுடன் உக்ரைன் இராணுவத்தினரின் தாக்குதலில் 3,500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் இராணுவம் கூறுயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் இலட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்திருந்தது.
ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் ஜனாதழபதழ ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்ததாா். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்றும் தாக்குதல்கள் நீடித்தன.
நேற்று வரை ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30 இற்க்கும்அதிகமான பீரங்கிகள் அழிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைனின் 211 இராணுவ தளங்களை இலக்காக கொண்டு அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைன் இராணுவ தாக்குதலில், நேற்று வரை ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளதாக உக்ரைன் இராணுவம் இன்று அறிவித்து உள்ளது.
ரஷ்ய படையெடுப்பினால், 10 இராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷ்ய இராணுவம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.