காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால், அவற்றின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மொத்தமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான சாந்த ஏக்கநாயக்க தெரிவித் துள்ளார்.