follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபுதிய இராஜதந்திரிகள் மூவர் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

புதிய இராஜதந்திரிகள் மூவர் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்

Published on

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

01. இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் – காலித் நசார் சுலைமான் அல் அமெரி (Khaled Nasser Sulaiman Al Ameri)

02. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (Julie Jiyoon Chung)

03. இலங்கைக்கான லிபியாவின் தூதுவர் நாசர் அல்ஃபுர்ஜானி (Nasser Alfurjani)

பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதான கூட்டமைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...