இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கை அணி குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.