தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடவேண்டியுள்ளதாகவும், இதற்கு ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர்கள் குழு தலையீடு செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (25) வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
“மக்கள் சார் மனிதாபிமானியான ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னம் இருக்கிறோம். குறிப்பாக, அவர் தற்போது சிறைப்படுத்தப்பட்டிருப்பது நமக்கும் நாட்டுக்கும் இழப்பாகவே பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ரஞ்சன்ராம நாயக்கவிற்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நேற்றும் இன்றும் அந்த கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அவருக்கு இன்னும் அந்தவிடுதலை வழங்கப்படவில்லை.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு மனிதாபிமானத்தின்,கருனையின் பெயரால் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலையை இந்த நாட்டில் வென்றெடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.