கொரோனா, டெல்ட்டா வைரஸ் பரவலின் தீவிரத்தால் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசாங்கம், முழு முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
வார இறுதியில் இந்த முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எனினும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு இடைவேளை சகிதம் இதனை அமுல்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமுடக்கம் முடக்கம் அமுல்படுத்தப்படும் போது அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பீதி கொள்ளத் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணம், பொருள் செலவுகளை சிக்கனமாக கையாளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.