திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரும் போதைப் பொருள் வர்த்தகருமான ரத்மலானை அஞ்சுவுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார்.
மொரகஹாஹேன பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 78 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்ட 21 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.