ரயில்வே திணைக்களத்திடம் போதியளவு டீசல் கையிருப்பு உள்ளதால் ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களத்தில் பாரிய அளவில் எரிபொருள் உள்ளதால் இதுவரையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.