உக்ரைன் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
இந்த பயணத்தில், இம்ரான் கான், விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து இரண்டு நாடுகளின் நலன் குறித்த முக்கிய கருத்துக்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.