பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் அவர்களின் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்காக உயர் தரத்திலான பொறிமுறைகளைப் பிரயோகிக்கும் நோக்கில் பால் உற்பத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தியத்தின் விவசாய திணைக்களம் நிதியனுசரணையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
தரமான பால் உற்பத்தியின் ஊடாக புதிய சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும் அதற்கான வேலைத்திட்டங்களுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு அமெரிக்க விவசாய திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தனியார் துறையைசார்ந்த பால் உற்பத்தியில் ஈடுபடும் 38 தரப்பினர் குறித்த வேலைத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் விவசாயத் திணைக்களத்திற்கும் எமது நாட்டின் விவசாய அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.