முகக் கவசத்தை கழற்ற முடியுமென சுகாதார திணைக்களம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதாவது ஒரு ஊடகத்தில் இது தொடர்பான தகவல் பதிவிடப்பட்டிருந்தால் அது உண்மைக்கு புறம்பானதென அவர் தெரிவித்தார்.
இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடவடிக்கை தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தற்போது காணப்படும் சட்டத்தை தளர்த்த முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு பரவி வருகிறது. வீட்டிலிருந்து வெளியில் வரும் போது தயவு செய்து முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களமோ, சுகாதார பிரிவோ இதுவரை முகக் கவசத்தை கழற்ற வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வரவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.