எரிபொருளை ஏற்றிய 05 கப்பல்கள் எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களினூடாக டீசல், பெட்ரோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாட்டில் போதுமான எரிபொருள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.