நாட்டில் இன்றைய தினம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விடுமுறை தினம் என்பதன் காரணமாக மின்சார தேவை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,மின்சார பயன்பாட்டினை குறைக்குமாறு பொது மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.