போதைப் பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்த தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதகாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 22,000 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 2,470 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்களை குறைக்க எதிர்வரும் சில மாதங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் தயாராகி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.