ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.