உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அதிசொகுசு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதலாவது ரயில் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து கண்டி மற்றும் எல்ல ஆகிய இடங்களுக்கு சேவையை தொடங்கவுள்ளதாக ரயில் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.