வைத்தியர் மொஹமட் சாபி ஷிஹாப்தீனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவின் முன்னிலையில் இன்று (17) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி வைத்தியர் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.